திருச்சி மாவட்டம் துறையூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தினர் குடும்பத்துடன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவர்கள் தங்கள் கோரிக்கைகளாக சாலை பணியாளர் பணி காலத்தில் உயிர் நீத்தோரின் குடும்பத்திலிருந்து கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்பட்டால் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒழிக்கப்படும் ஆதலால் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத சாலை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10% ஆபத்து படி வழங்க வேண்டும் நிரந்தர பயணப்படி சீருடை சலவை படி வழங்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் துறையூர் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.