திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள சோபனபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சேரிமலை, புதூர் மற்றும் ஒடுவம்பட்டி ஆகிய கிராமங்கள் சோபனபுரம் ஊராட்சியில் அமைந்துள்ளது. சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியாகும் இப்பகுதிகளில் இருந்து சோபனாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வைரி செட்டிபாளையம் கோட்டப்பாளையம் பள்ளிகளுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினமும் பேருந்தில் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் இருந்து கலை மாலை என தினசரி இருமுறை மட்டுமே அரசு பேருந்து இயக்கபடுவதாக தெரிகிறது காலை 6.30 மணிக்கும் மாலை 6 மணிக்கும் பேருந்து வந்து செல்லுவதாக இப்பகுதியில் வாழும் மலைவாழ் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கூடம் வழியாக கடந்து செல்லும் பேருந்து பள்ளி வளாகத்தின் அருகில் நிறுத்தப்படாமல் முன்னதாகவே ஒரு கிலோமீட்டருக்கு முன்பு இறக்கி விடப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
காலை 9:30 மணிக்கு தொடங்கும் வகுப்புகளுக்காக காலை ஏழு மணிக்கு முன்பே பள்ளி வளாகத்தை வந்தடையும் மாணவ, மாணவிகள் தாங்கள் கொண்டு வரும் காலை உணவு வகைகளை பள்ளி வளாகத்திலேயே சாப்பிட்டுவிட்டு சுமார் 2 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. மாணவர்களின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி நேரங்களில் பேருந்தை இயக்க இப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.