பெரம்பலூர்: மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று தனிப்படை போலீசார் நேற்று(நவம்பர் 10) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம் கீழத்தெருவை சேர்ந்த குமரன் (வயது 42) என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில் போலீசார் சோதனையிட்ட போது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குமரனை போலீசார் கைது செய்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 40 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 19 கூல்லிப் பாக்கெட்டுகள், 130 பான் மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.