உங்கள் லேப்டாப் பேட்டரி திறனை மேம்படுத்த, "Power Efficiency Mode" பயன்முறையை ஆக்டிவேட் செய்யலாம். இது உங்கள் மடிக்கணினி குறைந்த சக்தியைப் பயன்படுத்தும். இதன் காரணமாக பேட்டரி நீண்ட நேரம் தாக்கு பிடிக்கும். அதேபோல், 'ஆட்டோ எனர்ஜி சேவர்' பயன்படுத்தலாம். மேலும், திரையை ஆட்டோ- ஆஃப் செய்வதன் மூலம் பேட்டரியை சேமிக்கலாம். திரையின் பிரைட்நஸ் செட்டிங் செய்வது, ஸ்லீப் மோடிற்கு தானாகவே செல்லும் வகையில் செட்டிங்க்ஸில் மாற்றம் செய்து வைப்பது நல்லது.