எலி மருந்தால் குழந்தைகள் மரணம்... தனியார் நிறுவனத்தின் உரிமம் ரத்து

57பார்த்தது
எலி மருந்தால் குழந்தைகள் மரணம்... தனியார் நிறுவனத்தின் உரிமம் ரத்து
சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் வீட்டில் எலியைக் கட்டுப்படுத்த வைக்கப்பட்ட மருந்திலிருந்து வெளியேறிய நெடியால், 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் இச்சம்பவத்தில் குழந்தைகளின் பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், அறைகளில் எலி மருந்தை வைக்குமாறு தவறான வழிகாட்டுதல் வழங்கியதாக Unique பெஸ்ட் கண்ட்ரோல் என்ற நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நிறுவனத்திற்கு 2 தினங்களில் சீல் வைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி