உடையார்பாளையம்: இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலி
அரியலூர் மாவட்டம், பொட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் உடையார்பாளையம் அடுத்த எம்ஆர்சி அருகே திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் இன்று(செப்.21) சாலையை கடந்துள்ளார். அப்போது அருக்கு பின்னால் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் அதிவேகமாக ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ராமலிங்கம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.