அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் வீர மரணம் அடைந்த 21 தியாகிகளை போற்றும் விதத்தில் வீரவணக்க நாள் பாமக நகர செயலாளர் பரசுராமன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. அப்போது 21 தியாகிகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி வீர வணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் பாமக நிர்வாகிகள் மைனர் ராமதாஸ், அழகு சத்யராஜ், மதியரசன், ராஜேஷ், கலியபெருமாள், இளையராஜா, அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.