வாழும் தெய்வங்கள் ஆசிரியர்கள் மருத்துவர் உருக்கமான பேச்சு

81பார்த்தது
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் மருத்துவர் நித்தியா முகிலன் அவர்கள் கலந்து கொண்டு ஆசிரியருகளுக்கு சிறப்பு செய்து மாணவர்களிடம் பேசுகையில் ஆசிரியர்கள் தன்னலமின்றி உழைக்க கூடிய மிகச் சிறந்தவர்கள். உலகை மாற்றியமைக்கும் வல்லமை பெற்றவர்கள் எவ்வித பிரதிபலனும் பாராமல் தன்னிடம் பயின்ற குழந்தைகளின் உயர்வு எண்ணி மகிழ்ச்சி அடைபவர்கள்
வாழும் தெய்வங்கள் அவர்களின் சொல்படி கேட்டு நடந்தால் வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முடியும். உயர்ந்த பதவியையும் பெரும் புகழையும் பெற்ற பலரும் தங்கள் ஆசிரியரின் சொல் படி நடந்தவர்களே. உலகம் உங்களை நாடி வர வேண்டுமெனில் நீங்கள் ஆசிரியர்களை தேடிச் செல்ல வேண்டும். அனைத்து மாணவர்களும் உங்கள் ஆசிரியரின் கூற்றுப்படி நடந்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்றுகூறி சிறப்பிடம் பெற்ற.
மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
சில்ட்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் நிகில் ராஜ் கலந்து கொண்டார்.
ஆசிரியை தனலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர் செந்தில்குமரன் வெங்கடேசன் அந்தோணி சாமி ஆகியோர் மேற்கொண்டனர் நிறைவாக செந்தமிழ் செல்வி நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி