அங்கராயநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்*
அரியலூர் செப்-6;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அங்கராயநல்லூர் ஊராட்சியின் துவக்கப்பள்ளி வளாகத்தில் சிறப்பு கிராம கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சாமிதுரை தலைமையில் நடைபெற்றது.
இதில் இவ்ஊராட்சி நிர்வாகத்தை ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகத்துடன் இணைப்பதை கைவிட கோரியும், கடும் எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.