அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் வடவீக்கம் கிராமத்தில் புதியதாக போடப்பட்ட தார் சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதனை அடுத்து பள்ளத்தை மணலால் மூடிவிட்டு சாலை பணியாளர்கள் சென்று விட்டனர். இதனால் இப்பகுதியில் அவ்வபோது விபத்துக்கள் நடக்கின்றன. எனவே நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.