உலகம் முழுவதும் 3500-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. அதில், 600 மட்டுமே விஷத்தன்மை கொண்டவையாகும். இது பாம்புகளில் 25 சதவீதத்திற்கும் குறைவு. மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாம்புகளில் 200 இனங்கள் மட்டுமே உள்ளன. எனவே, எல்லா பாம்புகளையும் கண்டு நாம் கவலையோ பயமோ கொள்ளத் தேவையில்லை. இந்தியாவை பொறுத்தவரை ஏறக்குறைய 300 பாம்பு இனங்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு வாழ்விடங்களில் வசிக்கின்றன.