

கடல் நீரை உறிஞ்சும் மேகக் கூட்டங்கள் (வீடியோ)
தூத்துக்குடி கடல் பகுதியில் மேகக் கூட்டங்கள் கடல் நீரை உறிஞ்சும் அதிசய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தருவைகுளம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் இந்த வீடியோவை செல்போனில் படம்பிடித்துள்ளனர். 'கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் 'நீர்த்தாரைகள்' எனப்படும் இந்த அதிசய நிகழ்வு ஏற்படும். பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும்.