
ஏத்தர் நிறுவனத்தின் அப்டேட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதுப்பிக்கப்பட்ட 450 ரேஞ்ச் எலெக்ட்ரிக் கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில், 450 எஸ், 450 எக்ஸ் 2.9 kWh 450 எக்ஸ் 3.7 kWh ஆகிய 3 புதுப்பிக்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. 450 எஸ் ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோ ரூம் விலையாக ரூ.1.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 450 எக்ஸ் ரூ.1.64 லட்சமாகவும், 450 எக்ஸ் 3.7 kWh 1.57 Pro ரூ.1.77 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.