பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'இரும்புத்திரை'. இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. கதாநாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜுனும் நடித்திருந்தனர். இந்நிலையில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடன், இரும்புத்திரை 2 படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.