ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் 18-30 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான 14 நபர்கள் தொடர்ந்து இரு வாரங்களுக்கு சோதிக்கப்பட்டனர். அப்போது ஜூஸ் குடித்தவர்களின் வாயிலும், குடலிலும் தீய பாக்டீரியாக்கள் அதிகரிப்பது கண்டறியப்பட்டது. பழத்தைக் கூழாக்கி, சதை பகுதியை வடிகட்டாமல் அப்படியே சாப்பிடுவது உடலுக்கு நல்லது என கூறப்பட்டுள்ளது.