கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகுவதற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் தான் காரணம். அதன் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். நாளுக்கு நாள் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. எனவே போதைப்பொருட்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.