பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (டிச. 21) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எழுதி வைத்து கொள்ளுங்கள்.. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும். மீதமுள்ள 34 தொகுதிகளில் வெற்றி பெறும் என சொல்லவில்லை, வெற்றி, தோல்வி கிடைக்கலாம் அல்லது டெபாசிட் பெறலாம். டெபாசிட் போகும் என தெரிந்தவர்கள் தான் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பேசுவார்கள்” என்றார்.