பெரம்பலூரை சேர்ந்த சிங்காரவேலு - சந்தியா தம்பதியினரின் மூத்த குழந்தை விசித்ரா, தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் பள்ளி வாகனத்தில் விசித்ராவை ஏற்றி விட சென்ற சந்தியா, கையில் வைத்திருந்த தனது மகன் சண்முகவேலை கீழே இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது தவழ்ந்து சென்ற குழந்தை, எதிர்பாராத விதமாக பள்ளி வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.