மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏவும் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு பாஜக நிர்வாகி குஷ்பூ கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ, "ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நல்ல தலைவன் மட்டுமல்ல.. நல்ல மனிதன். என் அண்ணனை இழந்தேன் என்று சொல்லவா என் நண்பனை இழந்தேன் என்று சொல்லவா என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் விலகியபோதும் அதே அன்புடன் என்னுடன் பழகியவர்" என்று கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.