முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவிடம் தொடர்பான அவரது குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்த ஒன்றிய பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "மன்மோகன் சிங் குடும்பத்தினர் கேட்ட இடத்தில் இறுதிச்சடங்கு நடத்த அனுமதிக்காதது ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை அவமதிக்கும். மன்மோகன் சிங்கின் பங்களிப்பை நினைவுகளில் இருந்து அழிக்கும் வகையில் பொருத்தமான இடத்தை ஒன்றிய அரசு தரவில்லை. இது ஆணவம், ஒருதலைப்பட்சமான போக்கு" என்று பதிவிட்டுள்ளார்.