தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் லேண்ட்லைன் டெலிபோன்களில் STD Code பயன்பாட்டை நிறுத்த அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. செல்போன்கள் போலவே 10 இலக்கம் கொண்ட எண் அமைப்பை லேண்ட்லைன்களில் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது. 10 டிஜிட் எண் முறை இடையூறு மற்றும் தாமதத்தை குறைத்து நீண்டகால சேவையை வழங்க உதவும் என்று டிராய் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு 6 மாதங்கள் வரை கால அவகாசம் கொடுக்கப்படும்.