பொங்கலுக்கு கூடுதல் அரசு விடுமுறை விடவேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில், "ஜன.17-ந்தேதி ஒரு நாளை மட்டும் விடுமுறை நாளாக அரசு அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால், வெளியூர்களுக்குச் சென்று பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கூடுதல் விடுமுறை (ஜன,14 முதல் 19வரை) கிடைப்பதால் மகிழ்ச்சியடைவார்கள்" என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.