சென்னை விருகம்பாக்கம் பகுதியில் முதலமைச்சர் படம் இருந்த சுவரொட்டி மீது, வயதான தாயார் ஒருவர் மண் வாரித் தூற்றியும், செருப்பால் எரிந்தும் அவமதித்த காணொளியை, தனது சமூக ஊடகத்தில் பதிந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட இளைஞர் பிரதீஷை உடனடியாக, விடுதலை செய்வதோடு, அந்த வயதான தாயார் மீதான வழக்கையும் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.