ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ள நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.