இனி நாவல் கொட்டைகளை தூக்கிப் போடாதீர்கள்
சித்த மருத்துவத்தில் நாவல் கொட்டைகளுக்கு தனி இடம் உண்டு. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நாவல் கொட்டை பவுடரை சாப்பிட்டு வருபவர்களை பரிசோதனை செய்ததில் ரத்தத்தில் சர்க்கரை அளவும், சிறுநீரகத்தில் சர்க்கரை அளவும் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கொட்டைகளை உடைத்து உள்ளே இருக்கும் பச்சை நிறமும் காய்ந்த பிறகு மிக்ஸியில் அரைத்து சலித்து வைத்துக் கொண்டு இருவேளை ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடிக்கவும்.