விருதுநகர்: அருள்மிகு ஸ்ரீ மந்தையம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா

53பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மந்தை அம்மன் ஆலய பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட முளைப்பாரிகள் காண்போரை பக்தி பரவசமடைய செய்தது. 

அஷ்ட லட்சுமிகள் உருவம் கொண்ட முளைப்பாரிகள், குதிரையில் கருப்பசாமி உள்ள முளைப்பாரி, உடுக்கையுடன் சூலம் உருவம் கொண்ட முளைப்பாரிகளுடன் அருள்மிகு ஸ்ரீ மந்தை அம்மன் மாவினால் தத்ரூபமாக வடிக்கப்பட்ட மந்தை அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக மேளதாளத்துடன் ஆண்கள் பெண்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் சுவாமியாடினர். முளைப்பாரி வளர்த்த பூசாரி நாக்கில் சூடம் ஏற்றி தீபாராதனை காட்டப்பட்ட பின்னர் முளைப்பாரிகளை பெண்கள் தலையில் ஏந்தி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் அம்மன் உருவம் குறித்த முளைப்பாரிகளை பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 

அய்யனார் கருப்பசாமி ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்மி அடிக்கப்பட்டு பின்னர் பெரிய கண்மாயில் முளைப்பாரிகள் கரைக்கப்பட்டன. முளைப்பாரி ஊர்வலத்தில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் பக்தி பரவசத்தில் சாமி ஆடி மேளதாளத்துடன் முளைப்பாரி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு பெரிய கண்மாயில் கரைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி