ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

ஸ்ரீவி: கஞ்சா விற்பனை. வாலிபர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள ஓடையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது. கஞ்சா பறிமுதல். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் வட்டம், வன்னியம்பட்டியிலிருந்து சத்திரப்பட்டி செல்லும் வழியில் உள்ள வைத்திலிங்கபுரத்தில் உள்ள ஓடையின் முள்வேலி பகுதியில் போதை பொருளான கஞ்சாவை சட்டவிரோதமாக விற்பனை நடைபெறுவதாக வன்னியம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் முத்துமாரியப்பன் தலைமையில் போலீஸார் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேற்படி ஆய்வில் மதுரை சேர்ந்த மாயக்கண்ணன் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவர் வைத்திருந்த 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Nov 04, 2024, 16:11 IST/விருதுநகர்
விருதுநகர்

விருதுநகர்: இரு சக்கர வாகனங்கள் வாங்க பயனாளிகளை தேர்வு

Nov 04, 2024, 16:11 IST
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 10 வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ. 25, 000/- அல்லது வாகனத்தின் விலையில் 50% இதில் எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பயனாளிகளை தேர்வு செய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைவராகவும், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெற்ற சான்று, ஓட்டுநர் உரிமம், கல்வித்தகுதி வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், IFSC & MICR Code  விவரங்கள் அடங்கிய வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்க நகல், சம்மந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் விருதுநகர் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.