விருதுநகர் மாவட்டம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை கனமழை பெய்யுமென வானிலை மையம் தெரிவித்து உள்ள நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடி, மின்னல், காற்றுடன் கூடிய பலத்த கனமழை பெய்தன.
மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்த நிலையில் லேசான சாரல் மழையும் பெய்தது தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான மல்லி, வன்னியம்பட்டி, மம்சாபுரம், கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த கனமழை வெளுத்து வாங்கியது. இந்த கனமழையால் தாழ்வான பகுதியில் மழை நீர் ஆறாக ஓடியது. மேலும் சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு சாலையில் பயணித்தனர். கன மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.