ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் சாலையை கடந்த யானையால் பரபரப்பு. விவசாயிகள் அச்சம்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இங்குள்ள வனப் பகுதியானது ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக இருந்து வருகிறது. மேலும் இங்கு உள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் யானை, புலி, மான், மிளா, காட்டெருமை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, காட்டுப்பன்றிகள்உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாயிகள் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஒற்றை யானை நேற்று இரவு நேரங்களில் மலை அடிவாரத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து கரும்பு தோட்டத்திற்கு சென்று கரும்பை ருசித்து விட்டு பகல் நேரத்தில் சாலையைக் கடந்து வனப் பகுதிக்குள் செல்வது வழக்கமாக உள்ளது. இன்று காலை செண்பகத்தோப்பு நுழைவாயில் பகுதியான செக்போஸ்டில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது யானை வேகமாக சாலையை கடந்து சென்றது
இது தொடர்பாக ரோந்து பணியில் இருந்த வனத்துறை ரேஞ்சர் தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.