ஸ்ரீவி: தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த முதியவர் கைது...

68பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே லாட்டரி விற்பனை செய்த முதியவர் கைது. லாட்டரி சீட்டு மற்றும் ரொக்க பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வன்னியம்பட்டி கிராமத்திலுள்ள பெட்டிக்கடையில் வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக வன்னியம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் சுந்தர ராஜ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது பிள்ளையார் நத்தம் வடக்கு தெருவை சேர்ந்த 63 வயதுடைய முதியவர் பாதமுத்து என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணத்தை கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி