வானூர் - Vanur

வானுார்: செம்மண் குவாரியை ரத்து செய்யக்கோரி மக்கள் மனு

வானுார்: செம்மண் குவாரியை ரத்து செய்யக்கோரி மக்கள் மனு

வானுார் அடுத்த தலைக்காணிகுப்பம் ஊராட்சி முன்னாள் தலைவர் வேணுகோபால் மற்றும் கிராம மக்கள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அறிவுறுத்தலின் பேரில் கலெக்டரிடம் அளித்த மனு விபரம்: வானுார் தாலுகா, தலைக்காணிகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில், செம்மண் குவாரி 2 ஆண்டுகள் செயல்படுவதற்கு குத்தகை விடப்பட்டுள்ளது. இந்த குவாரியில், அரசு அனுமதித்த அளவைவிட, கூடுதலாக 10 மீட்டர் ஆழத்திற்கு செம்மண் வெட்டி எடுக்கப்படுகிறது. இதேபோல் அனுமதியின்றி கூழாங்கற்கள், கிராவல் மண் ஆகியவை எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பற்றி பொதுமக்கள் சார்பில் சென்று கேட்டபோது, குவாரி ஒப்பந்ததாரர் தரப்பில் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அரசு விதிமுறைகளை மீறி செயல்படுகின்ற செம்மண் குவாரிக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా