ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அறிவியல் நிறுவனம் ஒன்று, 4,825 பேரின் உணவு முறையையும் மற்றும் தூக்க முறையையும் ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் புரதம் மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்டவர்களுக்கு நல்ல தூக்கம் வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அதிகமான சோடியம் உள்ள உணவுகள் சாப்பிட்டவர்களின் தூக்கம் பாதிப்பதும், கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு இரவில் அடிக்கடி எழும் சூழல் ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.