தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து!

83பார்த்தது
தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து!
லாகூர்: ஐசிசியின் CT2025 கிரிக்கெட் தொடரில் இன்று(மார்ச்.05) நடந்துவரும் 2வது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்களை குவித்துள்ளது. ஆரம்பம் முதலே நியூசி. வீரர்கள் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். அதிகபட்சமாக ரச்சீன் ரவீந்திரா 108, கேன் வில்லியம்சன் 102, டேரில் மிட்சல் 49, க்ளென் பிலிப்ஸ் 49* ரன்கள் எடுத்தனர். தென் ஆப். பந்துவீச்சில் லுங்கி இங்கிடி 3, ரபாடா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி