மகாராஷ்டிராவின் லத்தூர்-நாந்தேட் நெடுஞ்சாலையில் கடந்த 48 மணி நேரத்திற்கு அடுத்தடுத்து இரண்டு கோர விபத்துகள் நடந்துள்ளன. நேற்று (மார்ச்.4) இந்த சாலையில் உள்ள U-turn-ல் திரும்ப முயன்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க பின்னால் வந்த பேருந்து வேறு பக்கம் திரும்பியபோது கவிழ்ந்ததில் 36 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இன்று (மார்ச்.5) அதே இடத்தில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தில் கார் ஒன்று மோதியதில் பைக் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.