கோடை காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை மற்றும் நீர் இழப்பு காரணமாக உடல் கடுமையாக சோர்வடையும். சிலருக்கு இதன் காரணமாக கடுமையான உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். சிறுநீரகம் உள்ளிட்ட உள் உறுப்புகள் கடுமையான சேதத்தை சந்திக்கலாம். குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல், தண்ணீர், இளநீர், குளுக்கோஸ் போன்ற எலக்ட்ரோலைட் நிறைந்த பானங்களை குடித்தல், இரு வேளை குளிர்ந்த நீரில் குளித்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.