அதிக வெயில் காரணமாக உலர் கண்கள், கண்களில் அலர்ஜி, காயங்கள், ஒவ்வாமை பாதிப்பு, புற ஊதாக் கதிர்வீச்சு பாதிப்பு போன்ற கண் நோய்கள் அதிகரித்து வருகின்றன. கண்ணில் எரிச்சல், எரிதல், சிவந்து போதல் ஆகியவை இருந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொள்ளுங்கள். அதிக வெயிலில் செல்லும் பொழுது கூலிங் கிளாஸ் அணிந்து கொள்ளுங்கள். சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்வீச்சு உங்கள் கண்களில் நேரடியாக படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.