திருவள்ளூர் மாவட்டம் சேலை கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற அதிமுக பிரமுகர் கடந்த மாதம் கேக் வேர்ல்டு என்ற கடையில் கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்று பணம் அனுப்புவதாக கூறி ஏமாற்றியுள்ளார். பின்னர் சரியாக ஒரு மாதம் கழித்து நேற்று (மார்ச்.4) அதே கடைக்கு போன் செய்து கேக் கேட்டுள்ளார். பணம் கொடுத்தால் கேக் தருக்கேன் என கடை உரிமையாளர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் ஆட்களை அனுப்பி கடையை அடித்து நொறுக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.