
கண்டமங்கலம் அருகே வாலிபர் இறப்பு; போலிசார் விசாரணை
கண்டமங்கலத்தை அடுத்துள்ள கொத்தாம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சாம்சன் (26), திருமணமாகாதவர். புதுச்சேரி நெட்டப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மதுப் பழக்கத்தால் சாம்சனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், புதன்கிழமை வயிற்று வலியால் அவதிப்பட்ட சாம்சனை வீட்டிலிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, சாம்சன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீசார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.