உலக வெப்பமயமாதல் காரணமாக கடல் வெப்பநிலையும் அதிகரித்து கடல் வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. மாறுகின்ற வெப்பநிலைக்கு ஏற்ப விலங்குகள் தங்களை தகவமைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளன. சைப்ரஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் பச்சை ஆமை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே கரைக்கு வந்து முட்டையிடுவது தெரியவந்துள்ளது. வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது முட்டை அழிந்து போக வாய்ப்புள்ளது. எனவே தன் இனத்தை தற்காத்துக் கொள்ள ஆமைகள் இவ்வாறு செய்கின்றன.