திருக்கோவிலூர்: நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சியுடன், கீரனுார் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருக்கோவிலுார் நகராட்சியுடன், கீரனுார், தேவியகரம் ஊராட்சிகளை இணைத்து, சமீபத்தில் அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூ. , மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் கிராம மக்கள் நேற்று காலை 10: 30 மணியளவில் கீரனுாரில் ஆசனுார் - திருவண்ணாமலை புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்குச் சென்ற டி. எஸ். பி. , பார்த்திபன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, 11: 00 மணியளவில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.