கேரளம்: தளி பரம்பு பகுதியில் நிலை தடுமாறிய பள்ளி வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (ஜன. 01) நிகழ்ந்தது. அதன்படி, 10 வயதான ஐந்தாம் வகுப்பு மாணவி தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கி உயிரிழந்தார், காயமடைந்த 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.