தூதுவளை கீரையின் பூ, காய், கொடி என அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டது. இந்த கீரையை வாரத்திற்கு ஒரு முறையாவது சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும். அனைத்து வயதினருருக்கும் ஏற்ற தூதுவளையை தொடர்ந்து பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைவதோடு, நினைவாற்றலும் பெருகும். காது நோய்களுக்காக சித்த மருத்துவத்தில் தூதுவளை பயன்படுத்தப்படுகிறது.