எடப்பாடி பழனிசாமியை கூட்டணிக் கட்சி தலைவராக ஒருபோதும் ஏற்க மாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ள அவர், '2019-ல் மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது இபிஎஸ் வரவில்லை. தோற்கப்போகும் மோடிக்காக எதற்கு நான் வரவேண்டும் என சொன்னவர் இபிஎஸ். என் தலைவரை அப்படி பேசியதால் மானமுள்ள அண்ணாமலை அன்றில் இருந்து இபிஎஸ்-ஐ கூட்டணி கட்சி தலைவராக ஏற்றுக்கொண்டதில்லை' என பேசியுள்ளார்.