தொடக்கப்பள்ளி மாணவியின் தந்தையை மிரட்டி பணம் பறித்த ஆசிரியை உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் தந்தையிடம் நெருக்கமாக பழகிய ஆசிரியை ஸ்ரீதேவி ருடகி (25) என்பவர் ரூ.2 லட்சத்துக்கும் மேல் பெற்றுள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மாணவியின் தந்தையிடம் ஒருகட்டத்தில் ரூ.15 லட்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு மறுக்கவே ஸ்ரீதேவி தனது கூட்டாளிகள் கணேஷ் காலே (38), சாகர் மோர் (28) ஆகியோருடன் சேர்ந்து மிரட்டியுள்ளார். இவர்கள் மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.