லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி கொள்ளை

55பார்த்தது
லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி கொள்ளை
கடலூர் மாவட்டத்தில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி பணம், செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4 வழிச்சாலையில் ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை வெட்டி மர்ம நபர்கள் வழிப்பறி செய்துள்ளனர். லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கும் ஓட்டுநர்களை குறிவைத்து இந்த துணிகர கொள்ளை அரங்கேறியுள்ளது. பைக்கில் கஞ்சா போதையில் வரும் சிறுவர்கள் சிலர், இக்குற்றத்தை செய்ததாக போலீசிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி