வேலூர்: உபரி நீர் கழிவு நீர் சேர்ந்து செல்வதை தடுக்க ஆட்சியர் ஆய்வு
வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பண்டங்கள் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் கழிவுநீர் கலந்த குடியிருப்பு பகுதிகளில் செல்வதை தடுப்பது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செந்தில்குமரன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன், வட்டாட்சியர் ஜெகதீசன், மற்றும் பலருடன் இருந்தனர்.