வேலூர் மாநகருக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.
வேலூர், காட்பாடி, அடுக்கபாறை, சத்துவாச்சாரி, பெருமுகை, விருப்பாட்சிபுரம், சாய்நாதபுரம், கொணவட்டம், சேண்பாக்கம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.