வாணியம்பாடி தாலுகாவை இரண்டாகவும் திருப்பத்தூர் தாலுகாவை இரண்டாகவும் அறிவிக்கக் கோரியும், மேலும் ஆலங்காயத்தை தலைமை இடமாகக் கொண்டு ஆலங்காயம் சட்டமன்ற தொகுதியாகவும், கொரட்டி தாலுகா ஆகவும் சட்டமன்ற தொகுதியாகவும், அறிவிக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி ராஜா பெருமாள் மனு அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் எந்த நலத் திட்டங்களும் சரியாக கிடைப்பதில்லை. எனவே திருப்பத்தூரை பாராளுமன்ற தொகுதியாக அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.