முனீஸ்வரன் கோவில் அருகே தனியார் பேருந்தும் இருசக்கர வாகனம் மோதி விபத்து பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் முனீஸ்வரன் கோயில் அருகில் தனியா பேருந்து மற்றும் இருசக்க வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் இருசக்கர வாகனம் சேதமடைந்தது. பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் மற்றும் காவலர்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரையும் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அழைத்துச் சென்றனர். நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளை வாணியம்பாடியில் இருந்து வெலதிகிமினிபெண்டா பகுதிக்கு பயணிகளை இறக்கிவிட்டு மூன்று மணிக்கு மேல் காவல் நிலையம் வருமாறு காவல் ஆய்வாளர் நாகராஜன் பேருந்து ஓட்டுநர் அஜ்மலுக்கு உத்தரவிட்டார். இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. தொடர்ந்து தனியார் பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்கள் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.