வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டை பகுதியில் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 135 கிலோ குட்கா பறிமுதல். ஒருவர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் மணிகண்டன் என்பவரின் வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் நகர போலீசார் விரைந்து சென்று மணிகண்டன் என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் 9 பைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா ஆகிய போதை பொருட்கள் இருப்பதை. கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து மணிகண்டன்(41) என்பவரை கைது செய்து, வீட்டில் இருந்த135 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா ஆகிய போதை பொருட்கள் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து நீதமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்